பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்தது ஐ.நா! அமைச்சர் விமல் பகிரங்க குற்றச்சாட்டு

ஐ.நாவின் கொழும்பு அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பொலிஸாருக்கு நேற்று இலஞ்சம் வழங்கி இருக்கின்றார்கள் என்று வீடமைப்பு மற்றும் பொறியியல் தொழில்நுட்ப அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸ இன்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.

அவர் கொழும்பில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாற்றியபோதெ இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“ஐ.நாவின் கொழும்பு அலுவலகம் மீது நேற்று முற்றுகை நடத்திய எனது ஆதரவாளர்களைக் கலைப்பதற்கு இந்த ஐ.நா ஊழியர்கள் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்திருக்கின்றார்கள்.

ஐ.நா ஊழியர்களின் இலஞ்சத்தை வாங்கிக் கொண்டே நேற்று மாலை ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கினர்.

ஐ.நாவின் இலங்கைக்கு எதிரான நிபுணர் குழுவை கலைக்கும் முடிவை பான் கீ மூன் உடனடியாக எடுக்க வேண்டும்.

தவறினால் நாடு பூராவும் உள்ள தேசிய சுதந்திர முன்னணி ஆதரவாளர்கள் நாடளாவிய ரீதியில் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பார்கள்.”

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.