விநாயகமூர்த்தி முரளீதரன் நடனமாடிய காட்சிகளை ஒளிபரப்பு செய்தமைக்காக அமைச்சக அதிகாரியின் பணி இடைநிறுத்தம்

மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ மற்றும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் ஆகியோர் நடனமாடி மகிழ்ந்த காட்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியமைக்காக அமைச்சு அதிகாரியொருவரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சு அதிகாரியின் சிரேஸ்ட புதல்வரின் திருமண வைபவத்தில் கலந்து கொண்ட போது அமைச்சரும், பிரதி அமைச்சரும் நடனமாடி மகிழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்தக் காட்சிகள் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்புச் செய்யப்பட்டதுடன், சில அச்சு இணைய ஊடகங்களில் புகைப்படங்கள் பிரசூரிக்கப்பட்டிருந்தன.
 
நடனமாடிய காட்சிகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியிதாகவும், இதனால் மீள் குடியேற்ற அமைச்சின் இணைப்புச் செயலாளர் ஸ்டேன்லி பத்திராஜவின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.