அவுஸ்திரேலியக் கடலில் மற்றுமொரு அகதிகள் படகு

அகதிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த மற்றுமொரு படகினை அவுஸ்திரேலியக் கரையோரக் காவற் படையினர் கண்டு பிடித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கரையோரப் பகுதியான அஸ்மோர் தீவுக்கு அருகில் இந்தப் படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் படகில் 32 பேர் இருந்ததாகவும் இவர்கள் வழமை போலவே கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கரையோரக் காவற் படையினர் தெரிவிக்கின்றனர்.

இந்தப் படகில் இருந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் எதுவும் வெளியிடப்படாத போதிலும் இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.