ஐநா ஊழியர்களுக்கு இலங்கை அரசு பாதுகாப்பு உத்தரவாதம் அளித்துள்ளது

கொழும்பு ஐ.நா. அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதையடுத்து இலங்கை அரசாங்கம் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. அதிகாரிகளுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது. இக்கலந்துரையாடல்களின்போது, கொழும்பிலுள்ள ஐ.நா. உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்புத் தொடர்பாக இலங்கை அரசாங்கம் உத்தரவாதம் அளித்ததாக ஐ.நா. இணைப்பேச்சாளர் சோய் சோங் – அஹ் டெய்லிமிரர் இணையத்தளத்தற்குத் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹென ஆகியோரே இந்த உத்தரவாதத்தை அளித்துள்ளதாக சோய் சோங் – அஹ் கூறியுள்ளார்.

ஐ.நா. தற்போது பாதுகாப்பு மதிப்பீடுகளை மேற்கொள்வதாகவும் கொழும்பு ஐ.நா. அலுவலக உத்தியோகஸ்தர்கள் விரைவில் மீண்டும் பணிக்குத் திரும்புவர் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.