மீண்டும் அரசசார்பற்ற நிறுவனங்களை வெளியேற்றும் பணியில் இலங்கை அரசாங்கம்

இரண்டு சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பணிப்பாளர் மற்றும் தலைவர் ஒருவரை நாட்டில் இருந்து வெளியேறுமாறு நேற்று (07) அறிவித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவுகளின் அறிக்கைகளை கவனத்தில் கொண்டு அவர்களின் வீசா அனுமதியை இரத்துச் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
அகிம்சைவாத சமாதான படையணியின் இலங்கை கிளையின் பணிப்பாளர் டிபானி ரிஷ்னம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அலி பால் ஆகியோரின் வீசா அனுமதிகளே இரத்துச் செய்யப்பட்டுள்ளன. டிபானி என்பவர் நேற்றைய தினம் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.