பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம்: அமைச்சர்களுக்கு மகிந்த உத்தரவு

mahinda20121-06பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தனது அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மக்களின் வாக்குகளை கவரும் நோக்கத்துடன் அமைச்சர்கள் பொதுக்கூட்டங்களில் அவசியமின்றி கலந்து கொள்வதை தவிர்த்தல் வேண்டும். சரியான பாதுகாப்புக்கள் இன்றி பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ஆபத்துக்களில் சிக்க வேண்டாம் என நான் முன்னரும் அமைச்சர்களை எச்சரித்திருந்தேன்.

இந்த வருடம் பொதுத்தேர்தலை நடத்தும் திட்டம் அரசிற்கு இல்லை. அமைச்சர்கள் பலர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு பிரிவினரை தவறாக பயன்படுத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

அக்குரச பகுதியில் நேற்று முன்நாள் நடைபெற்ற குண்டு வெடிப்பை தொடர்ந்தே அமைச்சர்களுக்கான அவசர கூட்டம் நேற்று நடத்தப்பட்டதுடன், மகிந்த இந்த அறிவித்தலையும் வெளியிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.