சிறிலங்கா செல்லும் உறவுகளிற்கான பிரயாண அறிவுறுத்தல் – விழிப்பாக இருங்கள்

நீண்ட காலத்திற்குப் பின்னர் எமது தாயக உறவுகளை பார்க்கச்செல்லும் இரவல் தாயக உறவுகளிற்கு வணக்கம். சிங்கள ராஜபக்சாக்கள் பல்லாயிரக்கணக்கான எமது தாயக உறவுகளைத் திறந்தவெளி சிறைகளிலும் சித்திரைவதை முகாம்களிலும் அடைத்துவைத்திருப்பது உங்களெல்லோரிற்கும் தெரிந்த விடயமே.

ஆகவேதான் இவற்றையெல்லாம் உல்லாசபயணிகள் ஆகிய உங்கள் மனதிலிருந்து அகற்றுவதற்காகச் சிங்களவர் உங்களுடன் பின்வரும் முறையில் நடந்துகொள்வார்கள் சிங்கள சிப்பாய், புதிய புத்தவிகாரைகள், சிங்கள ஊர்சுற்றிகள், தடைமுகாம்கள், சோதனைச்சாவடிகள் இவை அனைத்துமே உங்கள் கண்களிற் தெரியும்.

இந்த நிலை உங்களிற்கே சர்வ சாதாரணமாகப்படும். ஆனால் தடைமுகாம்கள், சோதனைச்சாவடிகள், ஆயுதம் தரித்த இராணுவத்தினர் நடமாட்டம் என்பன நீங்கள் வாழும் சமுதாயத்திலும் வழமையானவையா என்பதைச் சிந்தியுங்கள். சிங்கள சிப்பாய்கள் உங்களுடன் சிரித்துப் பேசுவார்கள், காக்கைவன்னியனின் வாரிசுகள் உங்களில் பலரை அன்புடன் அரவணைப்பார்கள், சிங்கள புலனாய்வாளர்கள் உங்களிற்குத் தெரியாமல் உங்களிற்குள் நுழைந்துவிடுவார்கள். இவை எதற்காகவென்ற கேள்வியெழுவது இயற்கையே. இவர்கள் உங்கள் மனதை வென்று, வெளிநாடுகளில் உங்களை வைத்தே தமக்குச் சாதகமாகப் பிரச்சாரம் செய்வதற்குப் பாவிப்பார்கள்.

தமிழர் தேசமெங்கும் தமிழர்களை முதலாளிகளில்லாமல் நுகர்வோராக்கச் சிங்களம் திட்டமிட்டுத் தனது இனத்தவரை பெட்டிக்கடைக்காராரக்கித் தமிழர்களின் வணிகங்களை இல்லாதொழிக்க வேலைசெய்கின்றது. ஆகவே நீங்கள் உங்கள் பணத்தினை பயன்படுத்தும் போது தமிழர்களின் நிறுவனங்களைத் தெரிவு செய்யுங்கள்.

சுற்றுலாபோகும் போது தமிழர் தாயகத்திலுள்ள பிரதேசங்களைத் தெரிவுசெய்யுங்கள். தமிழீழத்தில் பல உல்லாசமான கடற்கரைப்பகுதிகள் பல கரையோர நகரங்களிலும் உள்ளன. மன்னார் திருகோணமலை யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மட்டக்களப்பு அம்பாறை என்பன குறிப்பிடத்தக்கவை. உல்லாச பயணத்தின் போது சிங்களதேசத்தில் முதலீடு செய்யவரும்புவோர் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள்:

  1. சிறிலங்காவில் எந்தச் சட்டமும் ராஜபக்சகக்களால் தான் தீர்மானிக்கப்படுகின்றது. இந்த நாட்டில் ஆட்சி செய்பவர்கள் தமது சொந்தச் சட்டங்களையோ அல்லது சர்வதேசச் சட்டங்களையோ அனுசரித்து நடப்பவர்களல்லர்.
  2. சிங்கள தேசத்தின் முதலாவது எதிரியாக இருப்பது தமிழனல்ல. தமிழர்களின் முதுகெலும்பினை உடைத்து விட்டோமென்ற இறுமாப்பில் சிங்களவர்கள் இருக்கின்றார்கள். அவர்களிற்கு முதலெதிரியாகவிருப்பவை மேற்குலக நாடுகளான ஜரோப்பிய ஒன்றியம், வடஅமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா என்பன. உங்களில் பலர் இந்த நாடுகளிலிருந்துதான் பயணிப்பீர்கள். இந்த நாட்டு பிரஜைகளாக இருந்தாலும் சரி இரு நாட்டு பிரஜாவுரிமைகளை உடையவர்களாகவிருந்தாலும் சரி உங்களின் உரிமைகளைச் சட்டபூர்வமாகப் பெற்றுக்கொள்வதென்பது சிறீலங்கா என்னும் சிங்கள தேசத்தில் நடைமுறைக்குச் சாத்தியானமானதல்ல. பொருளாதாரப் பின்னடைவினால் மேற்குலகம் மிகவும் பாதிப்புற்றிருப்பதாலும் கீழைத்தேசம் முன்னணியில் நிற்பதாலும் மேற்குலகின் வேண்டுகோள்களினையோ கட்டளைகளையோ சிங்களதேசம் செவிமடுக்க மறுப்பது நீங்கள் அறிந்ததே. தமிழின அழிப்பில் முன்னணியில் நின்று ராஜபகசாக்களின் மனிதப்படுகொலைகளை நடாத்திமுடித்த கொலையாளி, சரத் பொன்சேகா சிங்களவர் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர். இந்தக் கொலையாளி இப்போது சிறையில் கம்பி எண்ணுகின்றாரென்றால் சாதாரண முதலீட்டாளர்களாக இருக்கக் கூடிய உங்கள் நிலைமையைச் சிந்தித்துப்பார்த்துச் செயற்படுங்கள். சிங்களவர்களுடன் சேர்ந்து உங்களைச் சூறையாட, காக்கை வன்னியன் கூட்டமும் காவலிருக்கின்றது.
  3. உங்கள் முதலீட்டிற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாத தேசத்தில் பணத்தை முதலீடு செய்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

இவ்வண்ணம்
பொன் மகேஸ்வரன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.