வீரவன்சவை தமிழ் மக்கள் பின்பற்ற வேண்டும் – மனோ கணேசன்

வீடமைப்புத் துறை அமைச்சர் வீரவன்ச தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணத்தைக் காட்டி இருக்கிறார் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்சவின் உண்ணாவிரதத்தின் நோக்கத்தை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற போதிலும் தனது நோக்கத்திற்காக அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அறவழிப் போராட்டத்தை முன்னெடுப்பது தமிழ் மக்களுக்கு நல்ல முன்னுதாரணம் எனத் தெரிவித்த மனோ கணேசன் அரசியல்  உரிமைகைளையும் உயிர் வாழும் உரிமையையும் வேண்டி நிற்கும் தமிழ் மக்கள் இதனைப் பின்பற்றி உண்ணாவிரதம் உள்ளிட்ட அறவழிப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

ஆயுதப் போராட்டத்திற்கு முன்னர் இடம்பெற்ற சாத்வீக போராட்டங்கள் அப்போதைய தலைமைகளினால் அலட்சியப் படுத்தப்பட்டது என்ற போதிலும் இன்று ஆளும் அமைச்சர் ஒருவரே அத்தகைய போராட்டத்தை முன்னேடுக்க ஆரம்பித்திருப்பதால் அதற்குச் சரியான பலன் கிட்டும் என நம்பலாம் எனவும் மனோ கணேசன் தெரிவித்திருக்கிறார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.