விமல் வீரவன்சவின் போராட்டம் தொடர்பாக அரசாங்கத்தின் கருத்து என்ன? – ரணில் விக்கிரமசிங்க கேள்வி

ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் முன்னால் ஆளும் கட்சியின் அமைச்சரான விமல் வீரவன்ச தலைமையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேட்டிருக்கிறார்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

சுகாதாரம் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சுக்களின் பணிகளை செவ்வனே மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணை நிறுவனங்களான யுனிசெப் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் போன்றவற்றின் பங்களிப்பு முதன்மையானது என்று தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அவர்கள் எவ்வாறு தமது கடமைகளை முன்னெடுப்பார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

சர்வதேச ரீதியான உறவுகளை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயல்களுக்கு ஊக்கமளிக்கப்படக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.