நீதியரசர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்! எதிர்க்கட்சிகள் பகீரதப் பிரயத்தனம்

உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்ற எதிர்க்கட்சியினர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்கள்.

முதலில் உயர் நீதிமன்ற நீதியரசர்களில் ஒருவரான கலாநிதி சிராணி பண்டார நாயக்கவுக்கு எதிராக இந்நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கின்றது.

இதற்கான நகர்வுகள் குறித்து ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் முக்கியமாக ஆராய்ந்து வருகின்றார்கள்.

தயாஸ்ரீ ஜயசேகர,லக்‌ஷ்மன் கிரியெல்ல,விஜயதாஸ ராஜபக்ஸ,கரு ஜயசூரிய,திஸ்ஸ அத்தநாயக்க ஆகிய எம்.பிகளுடன் இவர்கள் மந்திராலோசனையில் ஈடுபட்டும் இருக்கிறார்கள்.

நீதி பரிபாலனத்தை பிழையாக வழி நடத்துகின்றனர் என்று குற்றஞ்சாட்டியே இந்த நீதியரசர்களுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.