விமலின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் பொறுப்பு ஐ.நாவுக்கே உண்டு: சிறீலங்கா அரசு

கொழும்பு ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு உடனடி முடிவை எதிர்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை, அமைதியான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் தடங்கல் எதனையும் ஏற்படுத்தாது எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பீரிஸ், “அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வது எந்தவொரு குழுவினதும் ஜனநாயக உரிமையாகும். அந்த அடிப்படையில் அமைச்சர் விமல் வீரவன்ஸவினால் ஐ.நா. அலுவலகத்திற்கு வெளியே ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரதத்தை தடங்கல் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாது” எனவும் கூறியுள்ளார்.

எனவே ஐக்கிய நாடுகள் சபை தாம் அமைத்துள்ள ஆலாசனைக்குழுவை கலைத்து அரச தரப்பு வன்முறையாளர் என கருதப்படும் அமைச்சர் விமல் வீரவன்சாவின் ஐனநாயக விரோத வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என சிறிலங்கா அரசு மறைமுகமாக விரும்புவதையே பீரீசின் கருத்து தெளிவுபடுத்துவதாக அவதானிகள் தெரிவித்துள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.