இலங்கை இனவெறியர்களின் இடையூறால் ஐ.நா கொழும்புக் கிளை மூடப்பட்டுள்ளது

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொழும்புக் கிளை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் நியாயமற்ற முறையில் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி வருவதனால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் கொழும்புக் கிளை பணிகளுக்கு இடையூறு ஏற்படுவதனை தடுத்து நிறுத்த அரசாங்கம் தவறியுள்ளதென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் ஊடகப் பேச்சாளர் பாரா ஹக் தெரிவித்துள்ளார்.
 
கொழும்பு கிளையின் வழமை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் முனைப்பு காட்டவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி நீல் பூணேவை, பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியூயோர்க்கிற்கு மீள அழைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
நீல் பூணேயுடன், பொதுச் செயலாளர் பான் கீ விசேட பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.