மட்டக்களப்பை இரண்டாகப் பிரிக்க வேண்டும் – அரியநேத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தை இரண்டு நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கேட்டுள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

படுவான்கரை மற்றும் எழுவாங்கரைப் பிரதேசங்களை வேறுவேறு  நிர்வாக மாவட்டங்களாக மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அரியநேத்திரன் எனினும் இவ்விரண்டு பிரதேசங்களும் ஒரே தேர்தல் மாவட்டங்களாக இயங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிர்வாக சேவைகளில் வயது முதிர்ந்தவர்களே பணியில் இருப்பதை சுட்டிக் காட்டிய அரியநேத்திரன் இவர்களுக்குப் பதிலாக இளையவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.