மனித நேயத்துக்கு எதிரான குற்றச் செயல்களைப் பொறுத்துக் கொள்ளமுடியாது – ஜோன் ஹோம்ஸ்!

மனிதநேயத்துக்கு எதிரான குற்றச் செயல்களை பொறுத்துக் கொள்ளக்கூடாது. குற்றங்களுக்கு ஆதரவானவர்களை பதிலளிக்கும் கடப்பாடுடையவர்களாக்க வேண்டும். இதற்கு பொறுப்பானவர்களுக்கு சிறப்பு விடுபாடு வழங்கப்படக்கூடாது என்று ஐ.நா.வின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகம் ஜோன்ஹோம்ஸ் பாதுகாப்பு சபைக்கு கூறியுள்ளார்.

பொதுமக்களை இலக்கு வைத்தல், பாலியல் வன்முறை, மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை மறுத்தல் என்பன ஆயுதப் போராட்டத்தில் பரவலாக தொடர்ந்து காணப்படுகிறது.

போர் வலயங்களில் பொதுமக்களை எவ்வாறு சிறப்பான முறையில் பாதுகாப்பது என்பது தொடர்பாக விவாதிக்கும் சந்திப்பு பாதுகாப்பு சபையில் இடம்பெற்றது.

“மோதலில் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பதிலளிக்கும் கடப்பாடு மற்றும் தண்டனைக்கான சந்தேக உணர்வு என்பன வந்தால் பாதிக்கப்பட்டிருப்பது தவிர்த்துக் கொள்ள முடியாததாகும்.

அதேசமயம் சிறப்பு விடுபாட்டுக்கான தெளிவான சமிக்ஞைகளை சகித்துக் கொள்ளக்கூடாது என்று ஹோம்ஸ் கூறியுள்ளார்.

நேற்று ஐ.நா சபையில் இடம்பெற்ற விவாதத்தில் 40 பேச்சாளர்கள் பங்கேற்றனர். ஜோன் ஹோம்ஸ், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை ஆகியோரும் இந்த விவாதத்தில் கலந்து கொண்டனர்.

பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டை பாதுகாப்பு சபை எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் என்று ஜோன் ஹோம்ஸ் தெரிவித்தார்.

மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் ஐ.நா.வின் அவசரகால நிவாரணப் பணி ஒருங்கிணைப்பாளரென்ற வகையில் ஹோம்ஸ் ஆற்றிய இறுதி உரை இதுவாகும்.

கினியாவில் கடந்த செப்டெம்பரில் இடம்பெற்ற வன்செயலின் போது இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஆணைக்குழுவொன்றை செயலாளர் நாயகம் நியமித்தமை மற்றும் இலங்கையில் மனிதாபிமான மனித உரிமைகள் சட்ட மீறல்கள் தொடர்பான பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க நிபுணர்குழுவை அமைத்தமை போன்ற நடவடிக்கைகளை தான் வரவேற்பதாக ஜோன் ஹோம்ஸ் கூறியுள்ளார்.

“இந்தப் பரிசீலனையானது விதி முறையாக வரவேண்டிய தேவை உள்ளமையே இங்கு விடயமாகும். தாங்கள் மறைந்திருப்பதற்கு எங்கும் இடம் இல்லை என்பதை உரிமைகளை உண்மையில் மீறியிருப்போர் இனிமேல் மீறவுள்ளோர் விளங்கிக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது.

வல்லமை வாய்ந்த நாடுகள் மற்றும் குரல் கொடுக்க வல்ல நாடுகள் வலுவான பாதுகாப்புடன் இருக்கின்ற நிலையில் அரசியலானது எப்போதுமே வென்றுவிடும் என்று கூற முடியாது என்றும் ஹோம்ஸ் கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.