ஐ.நா. பிரச்சினைக்கு இன்று முடிவு காணப்படும்: ஜீ.எல்.பீரிஸ்

ஐக்கிய நாடுகள் சபையுடனான முறுகல் நிலைக்கு இன்று தீர்வு காணப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட பிராந்திய காரியாலயம் மூடப்பட்டமை மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி நியூயோர்க்குக்கு திருப்பி அழைக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் ஜீ.எல.பீரிஸ் இன்று நாடாளுமன்றில் விளக்கமளித்தார்.

2010ம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் குழுநிலை 5ம் நாள் விவாதத்தில் பங்கேற்ற போது, அமைச்சர் இந்த விளக்கத்தை வழங்கினார்.

ஐக்கிய நாடுகளின் கொழும்பு அலுவலகம் மூடப்பட்டதாகவும், நீல்புஹ்னே திருப்பி அழைக்கப்பட்டதாகவும் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் பிராந்திய காரியாலயமே மூடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நீல் புஹ்னே தற்போதைய நிலமை தொடர்பில் அழைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பணியாளர்கள் உரிய பாதுகாப்பை பெற்றுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தார்.

இன்றைய தினத்துக்குள் இந்த பிரச்சினைக்கு முடிவு காணப்படும் இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவித்த பீரிஸ், இது தொடர்பில் வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் நேற்று நீல் புஹ்னேயுடன் இராஜதந்திரமட்டத்தில் பேச்சு நடத்தியதாக குறிப்பிட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.