ஈழத் தமிழருக்கா தீக்குளித்த இன்னொருவரும் மரணம்

ravi20burlerஇலங்கைத் தமிழர்கள் நலனுக்காக தீக்குளித்ததாக கூறப்படும் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் ஒரு விவசாயி.2 நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் தீயில் கருகிய நிலையில் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக அவர் தீக்குளித்ததாக கூறப்பட்டது. ஆனால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே ரவி தீக்குளித்ததாக காவல்துறை கதையை உருவாக்கியது.

இதை ரவியின் மனைவி சித்ராவும், மூத்த மகன் பிரபாகரனும் மறுத்திருந்தனர். நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரைக்கு வந்து ரவியைப் பார்த்து நலம் விசாரித்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை ரவி உயிரிழந்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.