ஐ.நா.விற்கு எதிரான போராட்டங்களுக்கு மேற்குலகின் முக்கிய நாடுகள் இணைந்து கண்டனம்!

இலங்கை தலைநகர் கொழும்பில் இருக்கும் ஐ.நா. அலுவலக வளாகத்தில் நடந்துவரும் ஆர்பாட்டங்கள் தொடர்பில் அமெரிக்கா, ஜேர்மனி, ஐக்கிய ராஜ்ஜியம் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கூட்டாக தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன.

ஐ.நா. மன்ற வளாகத்தில் நடக்கும் ஆர்பாட்டங்கள் தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இலங்கையில் இருக்கும் மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

ஜெர்மனி, ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ரொமானிய, நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதரங்கள் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அமைதியான எதிர்ப்பு ஆர்பாட்டம் என்பது ஜனநாயக நடைமுறைகளில் ஒரு அங்கமென்றாலும் இப்படியான ஆர்ப்பாட்டங்கள் சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நற்பெயரை கெடுக்கும் செயல்” என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மன்றத்தின் பணியாளர்கள் மற்றும் அலுவலகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கும்படி இலங்கை அரசை தாங்கள் கோருவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.