ஐநா விவகாரம் தொடர்பில் சிறிலங்கா வெளிநாட்டமைச்சரைச் சந்திக்க அமெரிக்கா உள்ளிட்ட பத்து நாடுகளின் தூதுவர்கள் திட்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் முன்பாக நடைபெறும் போராட்டங்கள் தொடர்பிலும் இந்த விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் நடந்து கொள்ளும் முறை குறித்தும் கலந்துரையாடுவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட பத்து இராஜங்கச் செயலகங்களின் அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தச் சந்திப்பு எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சலாந்து, நெதர்லாந்து, ரோமானியா, நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய தூதராலங்கள் இணைந்து இன்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

இந்த அறிக்கையில் அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் தலைமையில் நடத்தப்படும் இந்தப் போராட்டங்கள் குறித்துக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமாதானமான முறையில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தப்படுவது ஜனநாயக நாடொன்றில் மதிக்கப்பட வேண்டும் எனினும் ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயம் முற்றுகையிடப்பட்டதும், அதன் அதிகாரிகளை சமுகமளிக்க முடியாதவாறு தடை செய்யப்பட்டதையும் தாம் கண்டிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.