மகிந்த நேரில் சென்று விமல் வீரவங்ஸவின் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துவைத்தார்!

ஐ.நா.வின் நிபுணர்குழுவை கலைக்கக்கோரி சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்த அமைச்சர் விமல் வீரவங்ஸ தனது போராட்டத்தை கைவிட்டார். அரசஅதிபர் மகிந்த நேரில் சென்று விமல் வீரவங்ஸவுக்கு பானம் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார். இதனைஅடுத்து, அவர் அம்புலன்ஸ் மூலம் வைத்தியாசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தினால், அமைக்கப்பட்ட நிபுணர்குழுவை கலைக்கவேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவங்ஸ் தனது உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தார்.

இரண்டு நாட்களாக உண்ணாவிரதப்போராட்டமிருந்த கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலக முன்றலுக்கு இன்று நேரடியாக சென்ற அரச அதிபர் மகிந்த, பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய அவருடன் பேசினர். வீரவங்ஸவின் குடும்பத்தினரும் அங்கு சென்றிருந்தனர்.

மகிந்தவுடன் பேசியதை அடுத்து, விமல் வீரவங்ஸ தனது போராட்டத்தை கைவிட்டார். மகிந்த அவருக்கு பானம் வழங்கி போராட்டத்தை முடித்துவைத்தார்.

இதனையடுத்து, விமல் வீரவங்ஸ அம்புலன்ஸில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.