விமல் வீரவன்ச இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

ஜனாதிபதியினால் நீர் அருந்தக் கொடுக்கப்பட்டு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பிற்பகல் ஜனாதிபதியின் தலையீட்டின் பின்னர் தனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்து அமைச்சர் தற்போது இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு தேவையான அனைத்து மருத்துவ தேவைகளும் இராணுவ வைத்தியசாலையில் வழங்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.