“இனி எம் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்திலிருந்து ஒரு சிங்களவன் உயிருடன் போகமுடியாது”: சீமான் ஆவேசம்

ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை மீதான ஐ.நா. சபையின் போர் குற்ற விசாரணை குழுவை எதிர்க்கும் சீனா, ரஷியா போன்ற நாடுகளை கண்டித்தும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்தும் தமிழகத்தில் இன்று நாம் தமிழர் இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர் தீரன், இயக்குனர் புகழேந்தி, தமிழ் முழக்கம் சாகுல்அமீது, நாம் தமிழர் இயக்க சென்னை மாவட்ட பொறுப்பாளர் அதியமான், நெல்லை சிவக்குமார், வெற்றிகுமரன், கார்வண்ணன், ராஜா, ஆவல்.கணேசன், வேலுசாமி, கர்நாடக மாநில பொறுப்பாளர் டாக்டர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நாம் தமிழர் இயக்க தலைவரும் தமிழின உணர்வாளருமான சீமான் பேசுகையில் கூறியதாவது:-

“ஐநா குழு இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தை நீருபிக்கும்.  அப்படி நிரூபித்துவிட்டால் தமிழ் ஈழம் தானே அமைந்துவிடும். அதனால் தமிழக தலைவர்களுக்கு நாம் தமிழர் சார்பில் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உதவி செய்ய வில்லையென்றாலும் பரவாயில்லை.  உபத்திரவம் செய்யாதீர்கள்.  உதவி செய்கிறேன் என்று ஏதேனும் பேசி காரியத்தை கெடுத்துவிடாதீர்கள்.

“இது வரை 500 மீனவர்கள் சிங்கவர்களால் பலியாகியுள்ளனர். ஆனால் இப்போது ஒருவர் பலியானதற்கு மட்டும் கலைஞர் அக்கறை செலுத்துவது ஏன்? பிரதமருக்கு கடிதம் எழுதுவது ஏன்? இவரின் குடும்பத்திற்கு மட்டும் 3 லட்சம் நிவாரணத்தொகை அறிவிப்பது ஏன்?   எல்லாம் தேர்தல் நெருங்கிவிட்டது என்பதற்காகத்தான்.

தமிழகத்தில் சிங்களவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி கணக்கெடுத்து வைத்திருக்கிறது. 

இனி ஒரு முறை தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவர்களை உயிருடன் விடமாட்டோம். அவர்கள் யாருடன் உயிருடன் இலங்கை திரும்ப முடியாது என்று எச்சரிக்கிறேன்” – என்று ஆவேசமாக பேசினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.