திருமலையில் இரண்டு இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன ‐ யோகேஸ்வரன்

அரசாங்கம் பலவந்தமாக திருகோணமலையில் இரண்டு இந்து ஆலயங்களை உடைத்து அப்புறப்படுத்தியதாகவும் மட்டக்களப்பில் உள்ள இந்து ஆலயங்களை படையினர் பயன்படுத்துவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.யோகேஸ்வரன் கடந்த 7 ஆம் திகதி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆலயங்களை அகற்றுவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரச்சபை இவற்றை சட்டவிரோத கட்டடங்கள் என போலியான ஆவணங்களை முன்வைப்பதாக ஆலயங்களின் பூசகர்கள் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வழிபாட்டு தலங்களில் காவற்துறையினர் காவலரண்களை அமைத்துள்ளனர்.

ராஜபக்ஷ அரசாங்கத்துடன் கைகோர்த்துக்கொண்டுள்ள தமிழ் அமைச்சர்களால் இந்து ஆலயங்களை பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை எனவும் யோகேஸ்வரன் கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.