பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் ஐ.நா மறுப்பு

un-logo-300x2701உலக உணவுத் திட்டம் புரதச் சத்து நிறைந்த பிஸ்கட் வகைகளை வன்னிக்கு அனுப்பி வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானதென ஐக்கிய நாடுகள் அமைப்பு மறுப்பு வெளியிட்டுள்ளது. சிறுவர் நல போஷாக்குத் திட்டத்தின் ஓர் கட்டமாகவே குறித்த வகை பிஸ்கட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள உலக உணவுத் திட்டம், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரதேசத்திற்கு பிஸ்கட்டுகளை உலக உணவுத் திட்டம் அனுப்பி வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.

இச்செய்தி உண்மைக்குப் புறம்பானதெனவும், இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுகாதார அமைச்சு, மாகாண சுகாதாரப் பணிப்பாளர்கள் ஆகியோரின் அனுமதியுடனேயே குறித்த வகை பிஸ்கட்டுக்கள் வன்னிப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர் போஷாக்கினை மேம்படுத்துவதே தமது அமைப்பின் முக்கிய நோக்கமாகக் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.