கே.பியிடம் உள்ள சொத்துக்களை தமதாக்கிக் கொள்ள ராஜபக்ச சகோதரர்கள் முயற்சி – அநுர குமார

கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனிடம் உள்ள சொத்துக்களை தமதாக்கிக் கொள்வதற்கு ராஜபக்ச சகோதரர்கள் முயற்சி செய்து வருவதாகவும் அதற்காக கே.பிக்கு சுகபோக வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸ்ஸநாயக்கா குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையிலிருந்து  பயங்கரவாதத்தை கூண்டோடு அழிப்பதற்காக பல்வேறு தியாகங்களைச் செய்த சரத் பொன்சேகா போன்ற வீரர்களை சிறைச்சாலையில் தடுத்து வைத்து துன்பப்படுத்தும் அரசாங்கம் நாட்டை அழிப்பதற்காக வெளிநாடுகளில் தீவிரமாக செயற்பட்ட கே.பிக்கு சுகபோகத்தை வழங்கி இருப்பது தேசத்துரோகம் எனவும் அநுர குமார திசாநாயக்கா குற்றம் சாட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான பணத்தையும் நகைகளையும் ராஜபக்ச சகோதரர்கள் ஏற்கனவே கையகப்படுத்தியதாகத் தெரிவித்த அநுரகுமார திசநாயக்கா இந்தச் சொத்துக்களை உடனடியாக அரசுடமையாக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.