சிறீலங்காவுக்கு அமெரிக்கா மீண்டும் கடும் எச்சரிக்கை – ஐ.நாவில் இருந்து சிறீலங்காவை வெளியேற்ற நடவடிக்கை?

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் வன்முறைகளை நிறுத்தி, ஐ.நா பணியாளர்களுக்கான பாதுகாப்புக்களை சிறீலங்கா அரசு வழங்கவேண்டும். சிறீலங்கா அரசின் நடவடிக்கைள் எம்மை கடும் விசனமடைய வைத்துள்ளது என அமெரிக்க இன்று (10) மீண்டும் கடுமையான எச்சரிக்கையை சிறிலங்கா அரசக்கு விடுத்துள்ளது.

இது தொடர்பில் அமொக்காவின் வெளிவிவகார செயலக பேச்சாளர்  மார்க் ரோனர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கொழும்பில் ஐ.நா பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்கள் எம்மை கடும் விசனமடைய வைத்துள்ளது. இந்த நடவடிக்கைகளை அரச அமைச்சர் ஒருவரே மேற்கொண்டு வருகிறார். கொழும்பில் உள்ள ஐ.நா பணியாளர்களின் பாதுகாப்புக்களை சிறிலங்கா அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

சிறீலங்காவில் ஐ.நா பணியாளர்கள் துன்புறுத்தப்படுகின்றனர், ஐ.நா பணியாளர்கள் மற்றும் அதன் நடவடிக்கை தொடர்பான அனைத்துலக விதிகளை சிறீலங்கா அரசு கடைப்பிடிக்க வேண்டும்.

கொழும்பில் உள்ள தனது பிராந்திய அலுவலகத்தை ஐ.நா முடியுள்ளது. அதன் பணியாளர்களையும் அது திரும்ப அழைத்துள்ளது. கொழும்பில் ஐ.நா பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தடைகள் காரணமாகவே ஐ.நா இதனை மேற்கொண்டுள்ளது. இந்த தடைகளை அரச அமைச்சரே மேற்கொண்டுள்ளார்.

சிறீலங்காவும் ஐ.நாவில் உறுப்பினராக இருப்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும். அது தொடர்பில் நாம் அதிக கவனங்களை செலுத்தி வருகின்றோம். சிறீலங்காவில் ஐ.நா பணியாளர்கள் துன்புறுத்தப்படுவதாகவே நாம் நம்புகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சிறிலங்காவில் உள்ள ஐ.நா அலுவலகத்தை நிரந்தரமாக மூடியுள்ள ஐக்கிய நாடுகள் சபையானது, சிறீலங்கா அரசை ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமையில் இருந்து விலக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்தே விமலின் உண்ணாநிலை போராட்டம் அவசரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்காவை ஐ.நாவின் உறுப்புரிமையில் இருந்து விலக்குவது தொடர்பாகவே அமெரிக்கா இன்று விடுத்துள்ள அறிக்கையிலும் மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.