ஐ.நா அலுவலகத்தை சிறீலங்காவில் இருந்து முற்றாக அகற்றுவதற்கு பான் கீ மூன் தீர்மானம்: ஐ.நா

சிறீலங்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை முன்னர் தீர்மானித்தபோதும், விமலின் போராட்டம் தொடர்வதால் அதனை முற்றாக அகற்ற அது திட்டமிட்டுள்ளதாக ஐ.நா பேச்சாளர் பர்ஹான் ஹக் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவத்துள்ளதாவது:

ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தை மூடுவதற்கும் வீரவன்சாவின் போராட்டத்திற்கும் தொடர்புகள் உண்டு.
ஐ.நா. அபிவிருத்தித்திட்ட பிராந்திய அலுவலக நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தும் முடிவினையே முன்னர் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கி மூன் எடுத்திருந்தார். ஆனால் தொடர்ந்து சத்தியாக்கிரகம் இடம்பெறுவதால் அந்த அலுவலகத்தினை முற்றாக அகற்றுவதற்கு அவர் முடிவெடுத்திருக்கிறார் .
 
ஐ.நா. அபிவிருத்தித்திட்ட பிராந்திய அலுவலகத்தை மூடுவதற்கு எடுத்திருக்கும் முடிவிற்கு அங்கு நிலவும் சீரற்ற நிலைமையேதான் காரணம். இதுதொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் எடுத்திருக்கும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை.

வெளிவிவகார அமைச்சரிடமும் இதுதொடர்பாக கலந்தாலோசித்திருக்கிறோம். ஆகையினால் எமது அபிவிருத்தித்திட்ட பிராந்திய அலுவலகத்தினை காலவரையறையின்றி மூடுகின்றோம் என தொடர்ந்தும் ஐ.நா. அலுவலகத்தின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்தார்.

சில மணி நேரங்களுக்கு முன்பு கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தினர்  கருத்துத் தெரிவிக்கும்போது ஐ.நா. அபிவிருத்தித்திட்ட பிராந்திய அலுவலகத்தை மூடுவதற்கும் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் போராட்டத்திற்கும் இடையில் தொடர்பு எதுவுமில்லை என குறிப்பிட்டனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.