சீமான் கைதாவாரா? வீடு, அலுவலகம் முன்பு போலீஸ் குவிப்பு-பரபரப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.  மூன்று பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள சீமான் வீடு மற்றும் அலுவலகம் முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சீமான் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்று பரபரப்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் சிங்கள மீனவர்களால் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது சீமான்,  ‘’தமிழகத்தில் சிங்களவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி கணக்கெடுத்து வைத்திருக்கிறது.

இனி ஒரு முறை தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவர்களை உயிருடன் விடமாட்டோம்.  அவர்கள் யாருடன் உயிருடன் இலங்கை திரும்ப முடியாது என்று எச்சரிக்கிறேன்’’ என்று ஆவேசமாக பேசினார்.

சீமானின் இந்த பேச்சு வன்முறையை தூண்டும் விதமாக இருக்கிறது என்றுதான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.