ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பம்

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வது தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வது குறித்து, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்படும் ஆக்கபூர்வமான யோசனைத் திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என இலங்கை அறிவித்துள்ளது.
 
இலங்கையின் இறைமைக்கு குந்தகம் ஏற்படாத யோசனைத் திட்டங்களை ஏற்றுக்கொள்ளத் தயார் என வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருத்தமற்ற நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த முடியாதென இலங்கை அரசாங்கம் கடிதம் ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.