இலங்கையின் ஒருமைப்பாட்டை காக்க இந்திய அரசு இராணுவ உதவி செய்கிறது: வைகோவுக்கு பிரதமர் மன்மோகன் கடிதம்

110982642961p1_922442983சேலத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று சேலம் வந்திருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,
செய்தியாளர்களிடம் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு இந்தியாதான் காரணம் என தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். அங்கு நடப்பது வெளியில் தெரியாமல் இருக்க சர்வதேச செய்தியாளர்களை இலங்கை அரசு அனுமதிக்க மறுக்கிறது.

தற்போது அங்கு நெருப்பு குண்டுகளை போட்டு தமிழர்களைக் கொல்ல முயற்சி நடக்கிறது. நெருப்பு குண்டுகளை போட்டால் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவார்கள். ராஜபக்ச 70 ஆயிரம் தமிழர்கள் தான் உள்ளதாக கூறி வருகிறார்.

போர் நடப்பதினால் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் அங்கு தமிழர்கள் சாகிறார்கள். தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்கும் வேலையில் ராஜபக்ச அரசு இறங்கியுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், மருத்துவமனைகள் மீது குண்டுகள் வீசக்கூடாது என்றும் கூறியுள்ளன. ஆனால் இந்திய அரசு இதுவரை ஏன் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தவில்லை.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு இந்தியாதான் காரணம். இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி செய்து வருகிறது. தங்கபாலு எம்.பி. ஆயுதம் கொடுக்கவில்லை, எந்தவித உதவியும் செய்யவில்லை என கூறியுள்ளார்.

ஆனால் பிரதமர் மன்மோகன் சிங், கடந்த அக்டோபர் 2 ம் தேதி எனக்கு எழுதியிருந்த கடிதத்தில், இலங்கையில் நடக்கும் பிரச்சினை உள்நாட்டு விவகாரம். இலங்கையின் ஒருமைப்பாட்டை காக்க இந்திய அரசு இராணுவ உதவி செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இராணுவ உதவிகள் மட்டுமின்றி, பண உதவியும் இந்திய அரசு செய்து வருகிறது’’ என்று கடிதமூலம் தெரிவித்திருந்தார்.

நாம் இது குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அமெரிக்க ஜனாதிபதி, ரஷியா ஜனாதிபதி ஆகியோருக்கு 2 கோடி கையெழுத்து பெற்று அனுப்பி வைக்க இருக்கிறோம்.

இவ்வாறு வைகோ செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.