ஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்

கூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ளது இதை ஜீமெயிலில் எப்படி சேர்க்கலாம் என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.

மாற்றம் ஒன்று தான் உலகில் மாறாதது என்பதை நன்கு உணர்ந்து தினமும் ஏதாவது புதுமையை புகுத்தி வரும் கூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயிலில் மெயில் கையெழுத்தில் புகைப்படத்தை சேர்க்கலாம் என்பதை அறிவித்துள்ளது. ஜீமெயில் நாம் அனுப்பும் ஒவ்வொரு மெயிலுக்கும் கீழேயும் நம்முடைய கையெழுத்தை அதாவது செல்லப்பெயர்,முகவரி என சேர்த்து அனுப்பும் வசதி கூகுள் signature -ல் உள்ளது நமக்கு தெரியும் ஆனால் இப்போது எழுத்தை மட்டுமல்ல படத்தையும் Signature ஆக சேமித்து வைக்கலாம் இதானால் நாம் அனுப்பும் ஒவ்வொரு மெயிலுடனும்  நம் சேமித்து வைத்த புகைப்படமும் சேர்ந்தே செல்லும்.

இதற்கு ஜீமெயிலில்  நம்முடைய கணக்கை திறந்து கொண்டு அதில் வலது பக்கத்தின் மேல் இருக்கும் Settings என்பதை தேர்ந்தெடுத்து  நம் புகைப்படத்தை எளிதாக சேர்த்துக்கொள்ளலாம். படத்தின் நீள அகலத்தையும் குறைத்துக் கொள்ளலாம். நம் கையெழுத்தை ஆன்லைன் மூலம் உருவாக்கி அதை கூட படமாக சேமித்து இதில் பதிவேற்றம் செய்யலாம்.

ஆன்லைன் -ல் நம் கையெழுத்தை எப்படி உருவாக்குவது

நம் கையெழுத்தை ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்கலாம்  எந்த மென்பொருளும் தேவையில்லை ஸ்கேனர் போன்ற எந்த உள்ளீட்டு சாதனமும் தேவையில்லை உதாரணமாக நாம் இமெயில் அனுப்பும் போது முடிவில் நம் சிக்னேசர் இட்டு அனுப்புவோம். இனி அதற்கு பதிலாக உங்கள் கையெழுத்தை ஒவ்வொரு மெயில் அனுப்பும் போது சென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதுமட்டுமல்ல நம் நண்பர்கள் வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு பதிவுஇடும் போதும் பதிவின் கீழ் அவர்கள் கையொப்பம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இனி ஆன்லைன் மூலம் கையெழுத்தை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.

http://www.mylivesignature.com/mls_sigdraw.php  இந்த இணையதளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி மவுஸ் துணையுடன் உங்கள் கையெழுத்தை உருவாக்குங்கள். புதிதாக உருவாக்க்குபவருக்கு எதாவது கிறுக்கல் எற்பட்டால் “Start Over ” என்ற பட்டனை அழுத்தி துடைத்தும் கொள்ளலாம்.

படம் 1

கையெழுத்தை உருவாக்கிய பின் “Create Signature ” என்ற பட்டனை அழுத்தி உங்கள் கையெழுத்தை உங்கள் கம்யூட்டரில் படமாக சேமித்தும் வைத்துக்கொள்ளலாம். உதாரணமாக நாம் உருவாக்கிய கையெழுத்து படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது.

இனி உங்களுக்கு தேவையான் இடத்தில் இந்த கையெழுத்தை எளிதாக எங்கு வேண்டுமானாலும் பதிந்து கொள்ளலாம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.