இந்திய விஜயம் முழுமையான வெற்றியளித்துள்ளது ‐ தமிழ்தேசியகூட்டமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் முழுமையான வெற்றியளித்திருப்பதாக தமிழ்தேசியகூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கருதது தெரிவித்த தமிழ் தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்  இந்திய பயணம் எதிர்பாராத வெற்றியைத்தந்துள்ளது.

இந்தியபிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கைச்சந்தித்து வடகிழக்கு மக்களின் நிலைமையை விளக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததுடன் முழுமையான அரசியல் விருந்தினர்களாகவும் சென்றுள்ளனர்.

இந்தியஅரசாங்கத்தினால் வடகிழக்கில் முன்னெடுக்கப்கடும் அபிவிருத்திப்பணிகள் யாவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலோசனையுடனேயே மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அரசியல் தீர்வு குறித்து ஆடுத்த கட்டமாக பேச்சு நடாத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.