நான்காவது தடவையாக மூன்றாவது இடம் ஜேர்மனிக்கு

இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட ஜேர்மன் அணி ஸ்பெயின் அணியிடம் தோல்வியடைந்திருந்தது. இருந்தபோதிலும் மூன்றாவது இடத்தினைத் தீர்மானிக்கும் போட்டி இன்று அதிகாலை இடம்பெற்றது.

இப்போட்டியில் 3இற்கு 2 என்ற கோல்கணக்கில் ஜேர்மன் அணி உருகுவே அணியினை தோற்கடித்திருக்கிறது. இதன்மூலம் நான்காவது தடவையாக உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் மூன்றாவது இடத்தினை ஜேர்மன் அணி பெற்றுக்கொண்டிருக்கிறது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளுமே பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளின் ஆதிக்கமும் சரிசமமாகவே காணப்பட்டது. இருந்தபோதிலும் இறுதிக்கட்டத்தில் ஜேர்மன் அணி வெற்றிக்கோலினைப் போட்டு மூன்றாவது இடத்தினை உறுதி செய்திருக்கிறது.

2010ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று தென்னாபிரிக்காவின் சொக்கர் ஸ்டேடியத்தில் கோலாகலமாக இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.