மட்டக்களப்பு மாவட்டம் மாங்கேணியில் புதிய கடற்படை முகாம்

மட்டக்களப்பு மாவட்டம் மாங்கேணிப் பகுதியில் புதிய கடற்படை முகாம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளை சிறிலங்கா கடற்படையினர் மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்காக வாகாரை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்திருக்கும் கயுவத்தைக் காணியில் 1200 ஏக்கரை தமக்கு ஒதுக்கித் தரும்படி வாகரைப் பிரதேசச் செயலாளரிடம் கேட்கப்பட்டுள்ளது.

இதற்குரிய இறுதி முடிவு பிரதேச செயலகத்தால் இன்னும் எடுக்கப்படாத நிலையிலேயே பெருமளவான கட்டடப்பொருட்கள் இந்தப் பகுதியில் கொண்டு வந்து குவிக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.