நகைச்சுவை நாடகத்தை தயாரித்த தயாரிப்பாளரான ஜனாதிபதி அதனை நல்லமுறையில் நிறைவு செய்து வைத்துள்ளார் ‐ கயந்த

விமல் வீரவன்சவை வைத்து அழகாக நகைச்சுவை நாடகத்தை தயாரித்த தயாரிப்பாளரான ஜனாதிபதி மஹிந்த அதனை நல்லமுறையில் நிறைவு செய்து வைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க குறிப்பிடுகின்றார்.

ஏற்கனவே சகல மக்களும் எதிர்பார்த்தப்படியே ஜனாதிபதி நடத்திய நாடகத்தின் முடிவு அமைந்துள்ளதாக குறிப்பிடும் அவர், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை எனவும் கூறினார்.
 
இந்த நாடகத்தின் மூலம் விமல் வீரவன்ச தான் விடுத்த சவாலில் தோல்வி கண்டுள்ளதுடன், இந்த அரங்கேற்றத்தினால் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
ஆகவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு இப்படி பொய்யான முறையில் தீர்வுகாண முற்படுவதைத் தவிர்த்து இராஜதந்திர ரீதியல் தீர்வு காணமுற்பட வேண்டும் எனவும், இலங்கை அரசு அவ்வாறு இராஜதந்திர ரீதியல் தீர்வு காண முற்படுமாயின் அதற்று ஐக்கிய தேசியக் கட்சி தமது முழுமையான ஆதரவை வழங்கும் எனவும் அவர் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.