வவுனியாவில் 60 ஏக்கர் காணியினை தனக்குத் தருமாறு மீள்குடியேற்ற அமைச்சரின் மகன் நிர்ப்பந்தம்!

வவுனியா செட்டிகுளம் பகுதியில் 60 ஏக்கர் நிலப்பரப்பினை தனக்கு வழங்குமாறு மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோவின் மகன் அரச அதிகாரிகளை நிர்ப்பந்தித்து வருகின்றமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாது,

வவுனியா செட்டிகுளம் வலயம் நான்கு முகாமை அடுத்துள்ள “மீடியா பாம் ” என்கின்ற பகுதியில் உள்ள நிலப்பரப்பினையே தனக்கு வழங்குமாறு அவர் நிர்ப்பந்திப்பதாக தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியில் உள்ள காணி பொதுக்காணி என்றும் அதனை தமக்கு வழங்குமாறு அவர் குறித்த பகுதியை உள்ளடக்கிய நிர்வாக உயர் அதிகாரிகளை நிர்ப்பந்திக்கும் அதேவேளை வட மாகாண ஆளுநரும் அதேகாணியை மில்றோய் பெர்னாண்டோவின் மகனுக்கு வழங்க வைப்பதற்கான பின் நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையில் குறித்த காணிப்பகுதி யாருடைய பெயரில் உள்ளது? அரச காணியா? தனியாருக்குச் சொந்தமானதா? போன்ற விபரங்களை அவர் திரட்டிவருவதாகவும் தெரியவந்துள்ளது.

அண்மைய காலமாக தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள மக்களது மற்றும் பொதுக் காணிகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் அரச உயர் மட்டத்தின் முண்டியடித்துச் செயற்பட்டுவருகின்றமை தெரிந்ததே,

இந் நிலையில் எதிர்காலத்தில பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சொந்தக் காணிகளைத் தொலைத்து ஏதிலிகளாக அலையும் அபாயம் எதிர்கொள்ளப்பட்டுள்ளதாக இடம்பெயர்ந்து மீள்குடியேற்றம் இன்னமும் அனுமதிக்காத நிலையில் உள்ள முதியவர் ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.