புலிகளின் நிலைகள் மீது வான்படை தாக்குதலாம்!! இலங்கை புலனாய்வின் வலையில் சில தமிழ் தேசிய இணையத்தளங்களும் சிக்கியுள்ளன!!!

மணலாற்றில் புலிகளின் நிலைகள் மீது இலங்கை வான்படை தாக்குதல்  என்ற செய்தி இன்று சில தமிழ்த்தேசிய உணர்வுள்ள இணயத்தளங்களில் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளன. இந்த செய்தி பரப்புரையின் உண்மைத்தன்மை, ஏன், எதற்காக என்பதை அறியாமல் தமிழ்த்தேசிய இணையத்தளங்களும் இலங்கை புலனாய்வு விரித்த வலையில் சிக்கியுள்ளது மிகவும் வேதனைக்குரிய விடயமாக அமைந்துள்ளது.

இனப்பிரச்சனைக்குரிய தீர்வு தொடர்பாக அனைத்துலகத்தின் அழுத்தம் இலங்கை மீது விழுந்துள்ள இந்த தருணத்தில், அண்மைக்காலமாக  அதை திசை திருப்பும் நோக்கில் புலிகளின் நடமாட்டம் அங்கேயுள்ளது, புலிகளின் நடமாட்டம் இங்கேயுள்ளது, முல்லைத்தீவு கடல் பரப்பில் புலிகளின் அதிவேகப் படகுகளின் சங்கமம் தென்பட்டது போன்ற உண்மைக்கு புறம்பான வதந்திகளை இலங்கை புலனாய்வாளர்கள் பரப்பி வருகின்றமை யாவரும் அறிந்த விடயம்.

இது மாதிரியான் செய்திகளை பரப்பி, புலிகள் தொடர்ந்தும் வன்னி மற்றும் பிற மாவட்டங்களில் செயல்ப்பட்டுக் கொண்டுள்ளார்கள் என்ற வெளிநிலைப்பாட்டை உருவாக்குவதனம்  மூலம் இலங்கை மீது விழுந்துள்ள அனைத்துலகத்தின் அழுத்தத்தை குறைப்பதோடு, தடுப்பு முகாம்களில் உள்ள எமது மக்களையும், போராளிகளையும் நிரந்தரமாக முகாம்களிலேயே வைப்பதற்க்க்கான சூழலையே இலங்கை புலனாய்வாளர்கள் மேற்க்கொண்டு வருகின்றார்கள்.

இதைக் கூடவா தமிழ்தேசிய உணர்வாளர்களால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. அல்லது புரிந்தும் இனவாதிகளின் செயல்ப்படுகளுக்கு துணை போகின்றார்களா??

தொடர்ந்தும் இது மாதிரியான தவறை இழைக்காமல் நிதானத்துடன் செயல்படும்படி தமிழ்த் தேசிய இணையத்தளங்களை மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த மாதிரியான செய்திகள் மூலம் மக்கள் மகிழ்ச்சி அடைந்து சிந்தனையை தவறவிட்டு, தொடர்ந்தும் சிங்கள இனவாதிகள் விரிக்கும் வலையில் சிக்கிக் கொள்ள வேண்டாமென புலம்பெயர் தமிழீழத்தை நெருடல் தாழ்மையுடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.