படுகொலைகள் குறித்து ஐ.நா. விசேட பிரதிநிதி இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானம்

cas7616hஇலங்கையில் இடம்பெற்று வரும் படுகொலைகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசேடபிரதிநிதி பிலிப் அல்ஸடன் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்து தாம் ஏற்கனவே அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும், அரசாங்கத்தின் சாதகமான பதிலுக்காக காத்திருப்பதாகவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் மனிதாபிமான பிரச்சினைகள் குறித்து கூர்ந்து அவதானித்து வருவதாக அல்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியில் இடம்பெயர்ந்து அல்லலுறும் பொதுமக்களை பாதுகாப்பது அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளின் முக்கிய கடமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை அவர்
நிராகரித்துள்ளார்.

இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றச் செயல்கள் குறித்து தமது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஒரு தரப்பின் யுத்த குற்றங்களை மூடி மறைப்பதற்கு மற்றுமொரு தரப்பின் யுத்த குற்றச் செயல்களை அனுமதிக்க முடியாதெனவும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.