கச்சதீவில் 50 இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்!

கச்சதீவுப் பகுதியில் இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் கண்மூடித் தனமான தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.

நேற்று இரவு மீன்பிடித்தலில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களை நோக்கிச் சென்ற கடற்படையினர் அவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல்களில் 50 மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் மீன்பிடித் தொழில் உபகரணங்களும் சேதமடைந்துள்ளதாகவும், இதனால் இலட்சக்கணக்கான ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை கடற்படைப் பேச்சாளர் அத்துல செனரத்ன. இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதாகவும் அந்தச் சம்பவம் எதுவும் இடம்பெற்றதாகத் தெரியவரவில்லை என்று தெரிவித்திருக்கின்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.