தமிழக மீனவரைத் தாக்கவில்லையாம்! இலங்கைக் கடற்படை அறிவிப்பு

தமிழக மீனவர்கள் 50 பேர் மீது நேற்று இரவு இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர் என்கிற குற்றச்சாட்டில் எவ்விதமான உண்மையும் இல்லை என்று இலங்கைக் கடற்படைப் பேச்சாளர் இலங்கைக் கடற்படைப் பேச்சாளர் கப்டன் அதுல செனவிரட்ண தெரிவித்தார்.

இக்குற்றச்சாட்டுத் தொடர்பாக கடற்படையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டமையை அடுத்து அப்படி ஒரு சம்பவமும் இடம்பெற்றிருக்கவில்லை என்று உறுதிப்படுத்தி உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் இந்திய மீனவர்களின் படகுகள் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் இடத்துக்கு வந்திருக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.