தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்த விருப்பம் தெரிவித்துள்ளது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அண்மையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
 
வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் செயன்முறையில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு இந்தியத் தலைவர்கள் தமக்கு ஆலோசனை வழங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
 
இடம்பெயர் மக்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பிலான தமது நிலைப்பாட்டையும் வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் இராணுவ மயப்படுத்தல்கள் தொடர்பிலும் இந்தியத் தலைவர்களிடம் சுட்டிக்காட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
13 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய இலங்கைக்குள் 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்துவதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பிலும் இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
விரைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.