கடத்தப்பட்ட பேராசிரியர் கங்காநாத் திசாநாயக்க விடுவிக்கப்பட்டுள்ளார்

tn_white-vanகடத்திச் செல்லப்பட்ட ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தம்மிக்க கங்காநாத் திசாநாயக்க விடுவிக்கப்பட்டுள்ளார். கடத்திச் சென்றவர்கள் தன்னை கிரிந்திவெல பிரதேசத்தில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் விட்டுச் சென்றதாக கங்காநாத் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் நேற்றிரவு 8 மணியளவில் மத்தேகொடவில் உள்ள அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டார். காவற்துறையினர் என கூறிய ஆயுதம் தாங்கிய சிலரால் இவர் கடத்திச் செல்லப்பட்டதாகவும் இவர்களில் சிலர் தமது தலைமுடியை நீளமாக வளர்த்திருந்ததாகவும் கங்காநாத் திசாநாயக்கவின் வீட்டுப் பணியாளர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.