யாழ். மானிப்பாயில் பாரிய பதுங்கு-குழி கண்டுபிடிப்பு!

யாழ். மானிப்பாயில் பற்றைக் காணி ஒன்றை துப்புரவு செய்தபோது நவீன வசதிகளுடன் கூடிய பாரிய பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது:

மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் நீண்ட காலமாகப் பற்றைக் காடாகக் கிடந்த 10 பரப்புக் காணியொன்றை டெங்கு நோய் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் துப்புரவு செய் வதற்காக சண்டிலிப்பாய் பிரதேச செயலர், மானிப்பாய் பிரதேச சபை செயலாளர், பொது சுகாதாரப் பரிசோதகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர் கள் ஆகியோர் அடங்கிய குழு வொன்று சென்றது.

3 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த சுமார் 300 இலகுவேலைத் திட்ட பயனாளி கள் பற்றைகளை அகற்றிக் கொண்டிருந்த வேளையில் அங்கு பாரிய பதுங்குகுழி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பதுங்குகுழியினுள் வெளவால்கள் குடி கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட பதுங்குளியினை படையினர் உடனடியாகச் சென்று பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.