கொழும்பு, ஐ.நா பணியகத்தின் நடவடிக்கைகள் இன்று முதல் வழமை நிலைக்கு திரும்பியுள்ளது – லக்பிம

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொழும்புக் கிளை நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு திரும்பும் என லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் இலங்கைத் தலைமையகத்தின் பணிகள் இன்றைய தினம் முதல் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

குறித்த காரியாலயத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

பணியாளர்கள் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள கொழும்புக் கிளையில் பணியாற்றிய சகல ஊழியர்களும் இன்றைய தினம் கடமைக்கு திரும்ப வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களினால் கடந்த 7ம் திகதி முதல் அலுவலகம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.