உக்கிரமான போரின் போது மனித உரிமைகளை முழுமையாகப் பேண முடியாது – ஜி எல் பிரீஸ்

உக்கிரமான போர் ஒன்று நடைபெறும் போது மனித உரிமைகளை முழுமையாகப் பேண முடியாது என்பதை சர்வதேச நாடுகளும் ஐநா சபையும் உணர வேண்டும் என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பிரீஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது சர்வதேச அரங்கில் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

30 ஆண்டு காலமாக நாட்டில் நிலவிய பயங்கரவாதம் காரணமாக சிறிலங்கா இழந்தவை அதிகம் என்பதை அனைத்து நாடுகளும் உணர வேண்டும் எனவும் இந்த நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

இது குறித்து ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனிற்கும் எடுத்துரைக்கப்பட்டிருப்பதாக ஜி.எல். பீPரிஸ் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.