மாலைதீவின் உள் விவகாரங்களில் மகிந்த தலையிட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று இன்று அந் நாட்டில் ஆர்ப்பாட்டம்!

மாலைதீவின் உள்விவகாரங்களில் தலையிட்ட இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜ பக்சவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மாலைதீவில் பாரிய ஆர்ப்பாட்டப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

அண்மையில் மாலைதீவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை அடுத்து அந்த நாட்டின் ஜனாதிபதி முகமட் நசீர் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் கடந்த வாரம் மகிந்தராஜ பக்ச மாலைதீவுக்கான பயணத்தினை மேற்கொண்டிருந்தார்.

அங்கு சென்ற மகிந்த எதிர்க்கட்சிகள் அந்த நாட்டின் ஜனாதிபதியுடன் ஒத்துழைத்து செயற்படுமாறு வலியுறுத்தியிருந்தார்.

இதனை அடுத்து இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று நடத்துவதற்கு மாலைதீவின் பிரதான எதிர்க்கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

காலநிலை பாரிய அளவில் சீரற்றுக் காணப்பட்டமையால் நேற்று அந்தப் போராட்டம் கைவிடப்பட்ட போதிலும் இன்று குறித்த போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.