தர்ஷிகாவின் திடீர் மரணம்! சந்தேகநபரான வைத்தியர் கைது

வேலணை அரச வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் பதில் கடமையாற்றிய குடும்ப நலப் பணியாளர் எஸ்.தர்ஷிகாவின்(வயது 28) திடீர் மரணம் தொடர்பாக அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான பிரியந்த செனவிரட்ண(வயது 38) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தர்ஷிகாவை கடந்த சனிக்கிழமை கற்பழித்துப் படுகொலை செய்த பின்னர் தூக்கில் தொங்கப் போட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இவர் இரத்தினபுரியைச் சொந்த இடமாகக் கொண்டவர் ஆவார்.

தர்ஷிகா கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் குடும்ப நலப்பணியாளர்கள் அவர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கறுப்புப் பட்டி அணிந்து கொண்டு கடமையில் இன்று ஈடுபட்டிருக்கின்றார்கள்.

வேலணை மத்திய மருந்தகத்தில் வெளிக்கள குடும்பநல மருத்துவ மாதுவாக பணியாற்றிய கைதடி தெற்கைச் சேர்ந்த 27அகவை செல்வி தர்சிகா சரவணன் அங்கு கடமையாற்றிய சிங்கள மருத்துவரான 38அகவை ரத்னபுரியைச்சேர்ந்த பிரியந்த செனிவரத்னா அவர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.