மீண்டும் கதவைத் திறக்கிறார் நித்தியானந்தா

கடந்த 80 நாட்களின் பின்னர் நேற்றைய தினம் பிடுதியிலுள்ள தனது ஆசிரமத்தில் ‘சுதந்திரம்’ என்ற தலைப்பில் பிரசங்கம் நிகழ்த்தியிருக்கிறார் சர்ச்சையில் சிக்கிய நித்தியானந்தா.

நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியதைத் தொடர்ந்து இருவரும் தலைமறைவாகியிருந்தனர். அண்மையில் நித்தியானந்தா மட்டும் இமயமலை அடிவாரத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட அவர், நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். அதில் நித்தியானந்தா பிரசங்கம் செய்யக்கூடாது என்பது முக்கிய நிபந்தனையாக இருந்தது.

இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த நிபந்தனையை தளர்த்தியதைத் தொடர்ந்தே நேற்றைய தினம் மீண்டும் ‘கதவைத் திறவுங்கள் காற்று வரட்டும்’ என பிரசங்கத்தினைத் தொடர்ந்திருக்கிறார் நித்தியானந்தா.

நித்தியானந்தாவுக்கு நெருக்கமான பலபக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கிறார்கள். நடிகை மாளவிகா இந்த பிரசங்கத்தில் கலந்துகொண்டு நித்தியானந்தாவிடம் ஆசிர்வாதமும் பெற்றிருக்கிறார். (மற்றுமொரு வீடியோ தயாராகிறதோ தெரியவில்லை…)

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.