ஜி.எஸ்.பி. விவகாரத்தில் முன்னேற்றமில்லை – ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை நீடிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் பேர்னார்ட் சவேஜ் இது தொடர்பாக டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு தகவல் தருகையில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸுடன் நடத்தப்பட்ட இப்பேச்சுவார்த்தையில் புதிய திருப்பங்கள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறியுள்ளார்.

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிபந்தனைகள் இலங்கையின் இறையாண்மையை மீறுவதாகும் எனத் தெரிவித்து அவற்றை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. இதனால்  அடுத்த மாதம் 15 ஆம் திகதியுடன் இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை நிறுத்தப்படும் நிலைமை எதிர்நோக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயத்தில் புதிய யோசனைகள் எதையும் முன்வைப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் ஆராய்கிறதா எனக் கேட்டபோது, தற்போது அவ்வாறான திட்டம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என சவேஜ் பதிலளித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.