உண்ணாவிரதம் தொடர்பில் தியாகி திலீபனிடம் கற்றுக்கொள்ளுங்கள் – வீரவன்சவிற்கு சிறிதுங்க தெரிவிப்பு!

உண்ணாவிரதம என்றால் என்ன என்பதை தியாகி திலீபனிடம் ஜனாதிபதியின் இயக்கத்தில் நடித்த விமல் வீரவன்ச கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்சவின் போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் தவறு செய்யவில்லை என்றால் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு முகம் கொடுக்க ஏன் தயங்குகின்றது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிபுணர் குழுவை கலைக்கும் வரை சாகும் வரையிலான உண்ணாவிரதத்தினை தொடரப் போவதாகவும் அதன் போது தனது உயிர் பிரிந்தால் போராட்டத்தை தொடருமாறும் தனது ஆதவாளர்களிடம் கோரிக்கை விடுத்த விமல் வீரவன்ச, ஐ.நா.வின் நிபுணர்குழு கலைக்கப்படாத போதும் அவருடைய உண்ணாவிரதத்தினை கைவிட்டுள்ளார்.

பொது மக்களை ஏமாற்றி மகிந்தராஜபக்சவும் விமல் வீரவன்சவும் மேற்கொண்ட நாடகம் இன்று அம்பலமாகியுள்ளது. அது மாத்திரமல்லாமல் இந்த செயற்பாட்டால் எமது நாடு உலக நாடுகள் மத்தியில் கேலிக்கிடமாகியுள்ளது.

எமது நாட்டில் இரண்டு மூன்று தினங்கள் உண்ணாமல் இருப்பவர்கள் ஏராளம் உள்ளனர். இவர்கள் மத்தியில் விமல் வீரவன்ச செய்வதை எப்படி உண்ணாவிரதம் என்று கூறுவது. விமல் சாகும்வரையில் ஒரு போதும் உண்ணாவிரதம் இருக்கப் போவதில்லை. ஐ.நா. செயலாளர் நாயமக் அமைத்த நிபுணர் குழுவை கலைக்கப் போவதும் இல்லை.

சாகும் வரையிலான உண்ணாவிரமென்றால் என்னவென்பதை தியாகி திலீபனிடம் இவர்கள் கற்றுக் கொள்ளவேண்டும். மாறாக பொதுமக்களை ஏமாற்றி இப்படியான கோமாளி நாடகங்களை அரங்கேற்றி எமது நாட்டிற்கு ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.