சுவிஸில் சூறிச் மாநிலத்தில் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த நாள் 2010

வீரத்தினதும் உயிர்ஈகத்தினதும் மனஉறுதியினதும் அதிஉயர்வடிவமாக எமது தேசியத்தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டு, உயிராயுதம் என்ற பெயர் சூட்டப்பட்டு இனங்காட்டப்பட்டவர்கள் கரும்புலிகள்.

1987ல் யாழ் குடாநாட்டின் வடமராட்சிப்பகுதியை ஆக்கிரமித்த சிங்களப்படைகள் நிலைகொண்டிருந்த நெல்லியடி மகாவித்தியாலயத்தில் வெடிமருந்து ஏற்றிய வாகனத்தை ஓட்டிச்சென்று, தடைகள் பல உடைத்து தாக்குதல் புரிந்த முதற்கரும்புலி வீரன் கப்டன் மில்லர். அந்த மில்லர் என்னும் உயிராயுதம் காட்டியவழியில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடைகளை அகற்றிட அதிஉயர் உயிராயுதங்களாக உயிர்ஈகம் செய்த பல நூற்றுக்ணக்கான கரும்புலிகளின் நினைவு சுமந்த நாளை சுவஸ் வாழ் தமிழ்மக்களும் நினைவுகுர்ந்தனர்.

11.07.2010 ஞாயிறு அன்று சுவிஸில் சூறிச் மாநிலத்தில் நடைபெற்ற கரும்புலி வீரர்களின் நினைவு சுமந்த நாளில்  ஈகைச்சுடரோடு தேசியக்கொடி ஏற்றப்பட்டு ஆரம்பித்துவைக்கப்பட்ட நிகழ்வில், தமிழீழ விடுதலைப்புலிகள் சூசிஸ்கிளை கலைபண்பாட்டுக் கழகத்தினரின் எழுச்சி கானங்கள், எழுச்சிநடனம், வயலினிசை, கவிதை சிறப்புரைகளென பல நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்தோடு கரும்புலிகளின் முகம்தெரியா உருவப்படம் பொறித்த சுவர்க்கடிகாரமும் வெளியீட்டு வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மண்டபம் நிறைந்த மக்களோடு 04.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இன் நிகழ்வு 07.00 மணியளவில் தேசியக்கொடி இறக்கப்பட்டு புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் என்னும் தாரகமந்திரத்தோடு நிறைவு பெற்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.